டிசம்பர் 31க்குள் வெளியேற வேண்டும் : மலேசிய அரசு அதிரடி !

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் டிசம்பர் 31க்குள் வெளியேற வேண்டும் என, மலேசிய அரசு உத்தரவிட்டுள்ளது.
முறையான ஆவணங்கள் இல்லாமல் மலேசியாவில் தங்கியுள்ளவர்கள், அவரவர் நாடு திரும்ப பொதுமன்னிப்பு திட்டத்தை அந் நாடு அமுல்படுத்துகிறது.
இதன்படி, இந்திய மதிப்பில் 12 ஆயிரம் ரூபாய் தண்டத் தொகையாக செலுத்திவிட்டு, அவரவர் நாட்டு தூதரக உதவியுடன் மலேசியாவை விட்டு வெளியேற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மலேசியாவில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு சட்டவிரோதமாக தங்கியுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதனால், வரும் டிசம்பர் 31க்குள் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மலேசியாவில் இருந்து தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
வருகிறது ஸ்மார்ட் பாஸ்போர்ட்!
பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்!
ஆர்டிக் கண்டத்தை கண்காணிக்க ஆர்க்டிகா-எம் செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது ரஷ்யா!
|
|