ஜேர்மனியை தாக்க 500 தீவிரவாதிகள் தயார்? அதிர்ச்சி தகவல்!

ஜேர்மனி நாட்டில் பயங்கர தாக்குதல் நடத்த 500 தீவிரவாதிகள் தயார் நிலையில் உள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சரான Thomas de Maiziere நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.’ஐரோப்பாவிற்குள் அகதிகள் வேடத்தில் தீவிரவாதிகள் நுழைந்துள்ளனர். ரத்தவெறி கொண்ட இந்த நரிகள் தற்போது ஜேர்மனி நாட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
தற்போது கிடைத்துள்ள ரகசிய தகவலின்படி 520 தீவிரவாதிகள் ஜேர்மனியில் உள்ளனர். ஆனால், இவர்களை கண்டுபிடித்து கைது செய்வது கடினமானது.பாதுகாப்பு அதிகாரிகள் கணித்துள்ளதை விடவும் கூடுதலான தீவிரவாதிகள் நாட்டில் பதுங்கியுள்ளனர்.
நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தாலும் கூட, இந்த தீவிரவாதிகள் தாக்குதலை நடத்த தயார் நிலையில் உள்ளனர்.இதன் மூலம், ஜேர்மனியில் ஒரு பெரும் இழப்பை ஏற்படுத்த தீவிரவாதிகள் முயற்சி மேற்கொண்டுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related posts:
மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் துருக்கியில் 35 பேர் பலி!
மலேஷிய முன்னாள் பிரதமர் வீட்டில் ரூ.204 கோடி பறிமுதல்!
இன்ஸ்டர்கிரேம் கணக்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை!
|
|