ஜி.எஸ்.டி. சிறப்பு நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்தார் நிதிஷ்குமார்

Saturday, July 1st, 2017

ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ள நிலையில் இன்று இரவு நடைபெறவுள்ள சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் பீகார் அமைச்சர் விஜேந்திர யாதவ் பங்கேற்பார் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.டி. அறிமுக விழாவை கொண்டாடும் வகையில் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்று இரவு 10.45 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் மேற்கொள்ளப்படும் முக்கிய வரி சீர்திருத்தமாக கருதப்படும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பிற்கு காங்கிரஸ் திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அதற்கேற்ப இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்கப் போவில்லை என்றும் அறிவித்துள்ளன. இந்நிலையில் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்கமாட்டார் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: