ஜப்பானில் மீண்டும் நில அதிர்வு!

Thursday, December 29th, 2016

மத்திய நியூசிலாந்தில் மீண்டும் நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் இது ரிக்டர் அளவுகோலில் 5.5 மெக்னிடியுடாக பதிவாகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நில அதிர்வு ஏற்பட்டு எட்டு நிமிடங்களின் பின்னர் மீண்டும் 3.4 மெக்னிடியுட் அளவில் நில அதிர்வொன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நில அதிர்வினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

இதேவேளை, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.3 மெக்னிடியூடாக பதிவாகியுள்ளது.

டோக்கியோவில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டுள்ளது. எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. எவ்வாறாயினும் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 oqLzAN3 copy

Related posts: