ஜப்பானில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் – 50 அடி உயரத்திற்கு சுனாமி!

ஜப்பானில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், 50 அடி உயரத்திற்கு சுனாமி அலைகள் எழும்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள Kamaishi-யிலிருந்து சுமார் 175 மைல் தொலைவிற்கு உள்ளூர் நேரப்படி 2.37க்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவாகியுள்ளதாகவும் அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது
Fukushima Daiichi அணுமின் நிலையத்தில் இருந்து சுமார் 200 கி.மீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்து சுமார் 10.கி.மீற்றர் தொலைவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதேவேளை, மெக்சிகோவில் நேற்று 7.1 ரிக்டர் அளவிற்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 225 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இருப்பினும், மீட்பு நடவடிக்கைகள் முழுமையடையாத நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.ஏற்கனவே, இம்மாத தொடக்கத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 90 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், மின்சாரம், தொலைத்தொடர்பு வசதிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் 3 மில்லியன் மக்கள் நிலை குலைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மெக்சிகோவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு 50 அடி உயரத்தில் சுனாமி அலைகள் எழும்பியுள்ளன.
Related posts:
|
|