சைப்ரஸை ஒருங்கிணைக்கும் முயற்சியில் கிரீஸ் மற்றும் துருக்கி ஆர்வம்!

Friday, January 13th, 2017

40 ஆண்டுகளுக்கு மேலாக பிரிந்து இருக்கும் சைப்ரஸ் நாட்டை ஒருங்கிணைக்கும் முயற்சியை நோக்கமாக கொண்டு நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளில் கிரீஸ் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளை சேர்ந்த பிரதமர்கள் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள தான் இன்று ஜெனீவாவுக்கு செல்லக்கூடும் என்று துருக்கி பிரதமர் பினாலி இல்டிரிம் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு குறித்த அம்சத்தில் ஒரு பொதுத் தீர்வு எட்டப்படுவதை ஏற்றுக் கொள்ள அனைத்து தரப்பினரும் விருப்பப்பட்டால், அச்சூழலில் கிரீஸ் பிரதமர் அலெக்ஸிஸ் சிப்ராஸும் இதில் கலந்து கொள்வார் என்று கிரீஸ் நாட்டு பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இப்பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அமைப்பு, இந்த தீவின் பிரிவினை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இது தான் சிறந்த வாய்ப்பு என்று இப்பேச்சுவார்த்தையை வர்ணித்துள்ளது.

40 ஆண்டுகளாக பிரிந்து இருந்த சைப்ரஸ் நாட்டை மீண்டும் ஒருங்கிணைக்க ஒரு ஒப்பந்தம் உருவாவது மிகவும் நெருங்கி வருகிறது என்று தான் நம்புவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அன்டோன் குட்டேரஸ் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த தேவையான வழிமுறைகள் மற்றும் கருவிகள் இருந்தால் எட்டும் தொலைவில் இதற்கான தீர்வு அமையும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

_93539437_88274817_cyprus_624map

Related posts: