சூறாவளி: தெற்கு அமெரிக்காவில் 18 பேர் பலி!
Tuesday, January 24th, 2017
அமெரிக்காவின் தென் பகுதிகளில் சூறாவளியினால் குறைந்தது 18 பேர் பலியானதாகவும் மேலும் பலர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜோர்ஜிய மாநிலத்தின் 7 மாவட்டங்களில் அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு 12 பேர் சூறாவளிக்குப் பலியாயினர். மிசிசிப்பி மாநிலத்திலும் சூறாவளியால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புளோரிடாவின் வடக்குப் பகுதியிலும், ஜோர்ஜியாவின் தென் பகுதியிலும் மீண்டும் சூறாவளியும் கூடுதலான புயல் காற்றும் ஏற்படலாம் என்று வானிலை ஆய்வகம் முன்னறிவித்துள்ளது.மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படியும் பயணங்களைத் தவிர்க்கும்படியும் ஆலோசனை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts:
பிராந்திய ஒத்துழைப்பு மாநாட்டை புறக்கணிக்கும் இந்தியா!
இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கு இன்று திருமணம்!
அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உட்பட 29 அமெரிக்கர்களுக்கு பயணத் தடை - ரஷ்யா அதிரடி அறிவிப்பு!
|
|
|


