சுலோவாகியா நாட்டின் ஜனாதிபதியாக முதன்முதலாக பெண் தேர்வு!

Monday, April 1st, 2019

முதன்முதலாக சுலோவாகியா நாட்டின் பெண் ஜனாதிபதியாக Zuzana Caputova 58 சதவீத வாக்குகளை கைப்பற்றி வெற்றி பெற்றார்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுலோவாகியா நாட்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஊழலுக்கு எதிரான Zuzana Caputova என்ற பெண் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஆளும் கட்சி வேட்பாளராக மாரோஸ் செப்கோவிக் நிறுத்தப்பட்டார்.

இந்த தேர்தல், நன்மைக்கும், தீமைக்குமான போராட்டம் என Zuzana Caputova குறிப்பிட்டார். இந்த நிலையில், அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டதில் ஜூஜூனா கபுடோவா 58 சதவீத வாக்குகளை கைப்பற்றி வெற்றி பெற்றார்.

ஆளும் கட்சியின் வேட்பாளர் மாரோஸ் செப்கோவிக்கிற்கு 42 சதவீத வாக்குகள் விழுந்தன. சுலோவாகியா நாட்டில் பெண் ஒருவர் அதிபராக தேர்வு பெற்றிருப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: