சுற்றுலா பயணிகளுடன் சென்ற மலேசிய கப்பல் மாயம்!
Sunday, January 29th, 2017
31 நபர்களை ஏற்றிக் கொண்டு மலேசிய கடற்பகுதியை விட்டு சென்ற ஒரு கப்பல் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டின் கடல்சார் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போயுள்ள இந்த கப்பலில் பயணம் செய்தவர்களில் குறைந்தது 28 சீன சுற்றுலா பயணிகளும் அடங்குவர். கடந்த சனிக்கிழமையன்று, மலேசியாவின் கிழக்கு மாநிலமான சாபாவில் இருந்து இந்த கப்பல் புறப்பட்டவுடனே, துறைமுகத்துடனான தனது தொடர்பை அக்கப்பல் இழந்துள்ளது.
காணாமல் போன கப்பலை தேடும் மற்றும் மீட்கும் பணிகள், அப்பகுதியில் நிலவும் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மலேசியாவின் கடல்சார் அமலாக்கல் துறை தெரிவித்துள்ளது. ஆண்டின் இந்த சமயத்தில் இக்கடற்பகுதியில் புயல்கள் உண்டாவது இயல்பாகும்.
காணாமல் போன கப்பலில் பயணம் செய்த 31 பயணிகளுடன், மூன்று கப்பல் பணிக்குழுவினரும் பயணம் செய்தனர்.

Related posts:
விரிவடைகிறது மலேசிய அரசு முதலீட்டு நிறுவன மோசடி விசாரணை !
ரகானேயின் தந்தை கைது!
கச்சதீவு திருவிழாவுக்கு இம்முறை இராமேஸ்வரத்திலிருந்து 72 படகுகளில் 2,400 பேர் பயணம் - திருவிழா முன்ன...
|
|
|


