சுற்றுலாப் பயணிகளின் இரண்டு விமானங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து – 04 பேர் உயிரிழப்பு!

Wednesday, May 15th, 2019

தென் கிழக்கு அலாஸ்காவில் சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த விமானங்கள் இரண்டு மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரு விமானத்தில் 11 சுற்றுலா பயணிகளும், மற்றொரு விமானத்தில் 5 சுற்றுலா பயணிகளும் இருந்தனர். இரு விமானங்களும் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்றுவிட்டு, கெட்சிகன் நகருக்கு திரும்பி கொண்டிருந்தன.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் நடுவானில் இருவிமானங்களும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

கடல் சார்ந்த பகுதிகளில் பயன்படுத்துவதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள குறித்த இரண்டு விமானங்களுமே ராயல் பிரின்சஸ் எனும் கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமானவை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: