சுரங்க விபத்து – மியான்மரில் 162 போ் பலி!
Friday, July 3rd, 2020
மியான்மரில் நேற்று ஏற்பட்ட சுரங்க விபத்தில் 162 போ் உயிரிழந்தனா் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சீன எல்லையை ஒட்டிய காசின் மாகாணத்தில் பச்சை மாணிக்கக் கற்களை வெட்டியெடுப்பதற்கான சுரங்கங்கள் அமைந்துள்ளன. கடுமையான பாதுகாப்பு விதிகள் கடைப்பிடிக்கப்படாத இத்தகைய சுரங்கங்களில் குறைந்த கூலிக்கு ஏராளமான தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை பெய்த கனமழை காரணமாக பாகன்ட் பகுதியிலுள்ள சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான தொழிலாளா்கள் புதையுண்டனா். வியாழக்கிழமை இரவு வரை அந்தப் பகுதியிலிருந்து 162 உடல்கள் மீட்கப்பட்டன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
வடகொரியா மிது விதிக்கப்பட்டுள்ள தடைகளால் எதுவித பயனுமில்லை - புடின்
அமெரிக்க சந்திப்பை இரத்து செய்த வட கொரியா!
பழமையான தேசிய அருங்காட்சியகத்தில் பயங்கர தீ விபத்து!
|
|
|


