சுதந்திர ஹொங்கொங் செயல்பாடுகளுக்கு தண்டனை- சீனா மிரட்டல்!
Wednesday, September 7th, 2016
சுதந்திர ஹொங்கொங்கிற்கு ஆதரவாக செயல்படுவோர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என சீனா தெரிவித்திருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை வெளியான ஹொங்கொங்கின் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில், சுதந்திர ஹொங்கொங்கிற்கு ஆதரவான செயற்பாட்டாளர்கள் பலர் தேந்தெடுக்கப்பட்ட பின்னர் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
சட்டப்பேரவையின் உள்ளேயும், வெளியேயும் சுதந்திர ஹாங்காங்கிற்கு ஆதரவு தெரிவிக்கும் அனைத்து செயல்பாடுகளையும் சீனா எதிர்க்கிறது என்று செங்திகள் தெரிவிக்கின்றன..ஹொங்கொங் தன்னை நிர்வகித்து கொள்வதற்கு மேலதிக அதிகாரங்களை வழங்குவது பற்றி எவ்வித விவாதங்களுக்கும் முற்றுபுள்ளி வைக்க சீனா விரும்புவதாக தோன்றுகிறது.

Related posts:
யேமனில் சவுதி தலைமையிலான விமானப்படை தாக்குதலில் - பத்து பேர் உயிரிழப்பு!
இஸ்ரேல் படையினரின் தாக்குதலில் 16 பலஸ்தீனர்கள் பலி!
“மாலைதீவில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு இராணுவம் உடனடியாக வெளியேற்றப்படும்“ - - அந்நாட்டு புதிய ஜனாதிபத...
|
|
|


