சீனா வடகொரியாவிடமிருந்து நிலக்கரி வாங்கக் கூடாது – அமெரிக்கா!
Sunday, October 30th, 2016
வட கொரியாவுக்கு மிக முக்கிய அந்நிய செலாவணி ஆதராமாக விளங்குகின்ற, நிலக்கரி இறக்குமதியை நிறுத்திவிட சீனாவை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளதுடன் இது அணு திட்டத்திற்கு நிதி ஆதரவு வழங்குவதற்காக உள்ளதாகவும் அமெரிக்கா கவலையடைந்துள்ளது.
இந்த வர்த்தகம் சீனா இந்த விஷயத்தில் கொடுத்திருந்த உறுதிமொழிகளை மீறுவதாக அமெரிக்காவின் துணை வெளியுறவு செயலர் ஆண்டனி பிலின்கென் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தைக்கு முன்னர் கூறினார்.
ஐநாவின் தடைகளுக்கு இசைவாக நடக்கவும், மனிதநேய நோக்கங்களுக்கு அல்லாத விடயங்களில் இந்த வருமானத்தை பயன்படுத்துகின்ற இறக்குமதியை நிறுத்தவும் சீனா வாக்குறுதி அளித்திருக்கிறது. ஆயுத திட்டங்களுக்கு இந்த பணம் செல்வதை காட்டுகின்ற சான்று இருந்தாலன்றி இறக்குமதியை சீனா அனுமதிப்பது போல தோன்றுவதாக பிலின்கென் தெரிவித்திருக்கிறார்.

Related posts:
ஜப்பானை தாக்கவுள்ள சூறாவளி: விமானங்கள் இரத்து!
பயணத்தடைக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!
லண்டன் கனரி வோர்ப்பில் இரசாயன கசிவு - நுற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டு நிலமை கட்டுப்படுத்தப்பட்ட...
|
|
|


