முகக்கவச ஏற்றுமதியை தடை செய்த அமெரிக்கா – தவறு என்கிறார் கனேடிய பிரதமர்!

Saturday, April 4th, 2020

கனடாவுக்கும், லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் என் 95 ரக முகக்கவசங்களை ஏற்றுமதி செய்வதை தடை செய்யுமாறு அமெரிக்க அரசாங்கம் கோரியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முகக்கவசங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமான 3 எம் நிறுவனத்தி;டம், அந்த நாட்டு அரசாங்கம் இதனைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதற்கமைய, கொரிய போர்கால சட்டத்தை பயன்படுத்தி அமெரிக்கா இந்த நடவடிக்கைகை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 3 எம் நிறுவனத்தின் ஏற்றுமதிகளை இடைநிறுத்துவது தவறு என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, சர்வதேச ரீதியில், 10 இலட்சத்து 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

2 இலட்சத்து 28 ஆயிரம் பேரளவில் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ள நிலையில், சுமார் 59 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரொனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 76 ஆயிரத்து 965 ஆக அதிகரித்துள்ளது.

32 ஆயிரத்து 88 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்து 320 புதிய மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதற்கமைய, அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 200 ஐ கடந்துள்ளது.

இத்தாலியில் ஒரு இலட்சத்து 19 ஆயிரம் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

14 ஆயிரத்து 687 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 750 இற்கும் மேற்பட்ட புதிய மரணங்கள் பதிவாகியுள்ளன.

ஸ்பெய்னில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 19 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

11 ஆயிரத்து 198 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 850 புதிய மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதேநேரம், ஃப்ரான்ஸில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ள நிலையில், ஆயிரத்து 100 புதிய மரணங்கள் பதிவாகியுள்ளன.

பிரித்தானியாவில் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 38 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

684 புதிய மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 600 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில், 31 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அங்கு வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 600 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், 4 புதிய மரணங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்ரக 3 ஆயிரத்து 300 ஐ கடந்துள்ளது.

இந்தியாவில், 62 பேர் உயிரிழந்துள்ள நிலையில், வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 500 வரையில் அதிகரித்துள்ளது.

Related posts: