சீனா நடுநிலையாக செயற்படும்!
Saturday, August 12th, 2017
அமெரிக்கா மீது வடகொரியா தாக்குதல் நடத்தினால், சீனா நடுநிலையாக இருந்து செயற்பட வேண்டும் என்று ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா மீது வடகொரியா தாக்குதல் நடத்தும் பட்சத்தில், சீனா நடுநிலையாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்நிலையில், வடகொரியா மீது அமெரிக்கா முதலில் தாக்குதல் நடத்தினால் அதையும் சீனா தடுக்க வேண்டும்.
அமெரிக்காவின் பசுபிக் பிராந்தியமான குவாம் மீது தாக்குதல் நடத்துவதற்கான நான்கு ஏவுகணைகள் தயார் நிலையில் இருப்பதாக வடகொரியா அறிவித்திருந்தது. இதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் மீது வடகொரியா தாக்குதல் நடத்தினால், பாரிய பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்றும் டொனால் ட்ரம்ப் கூறியிருந்தார்
Related posts:
ஷெவ்ரன் எண்ணெய் நிறுவனம் மீது தீவிரவாத தாக்குதல்!
பொறுப்புக் கூறவேண்டும் அமெரிக்கா - ஈராக் !
ஜோன் மெக்கலம் பதவி இராஜினாமா!
|
|
|


