சீனாவுக்கு ரஷ்யாவின் போர் விமானங்கள்!
Saturday, May 26th, 2018
ரஷ்யா – 35 ரக 10 ஜெட் போர் விமானங்களை சீனாவுக்கு வழங்க உள்ளதாக செசய்திகள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவில் அரசு நிறுவனமான ரோஸ்டெக் போர் விமானங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனம் 70 நாடுகளுக்கு தனது தயாரிப்புகளை விற்கிறது.
இந்நிலையில் அந்நிறுவனத்திடம் இருந்து 250 கோடி டாலரில் 24 போர் விமானங்களை சீன அரசு விலைக்கு வாங்க ஒப்பந்தம் செய்தது. 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் – 35 ரக 14 ஜெட் போர் விமானங்களை சீனாவுக்கு அந்நிறுவனம் வழங்கி உள்ளது. மீதமுள்ள 10 போர் விமானங்களை இந்த ஆண்டிற்குள் வழங்கவுள்ளது.
Related posts:
பாகிஸ்தானில் ரயில் குண்டு வெடிப்பு: 4 பேர் பலி!
சக்திவாய்ந்த ஏவுகணையை சோதித்தது வடகொரியா!
உக்ரைன் ரஷ்யப் போரில் களமிறங்கும் வடகொரியா - ரஷ்யாவுடன் கை கோர்க்கும் கிம் ஜாங் உன்!
|
|
|


