சீனாவுக்கு சொந்தமான தீவாக தைவானை காட்டாததால் மன்னிப்பு கோரிய தொலைக்காட்சி நிறுவனம்!
Wednesday, October 12th, 2016
சீன தொலைக்காட்சி ஒன்று, சீனாவின் ஒரு பகுதியாக தைவானைக் காட்டாத வரைபடத்தை ஒளிபரப்பியதற்காக மன்னிப்புக் கோரியுள்ளது.
சுய ஆட்சி பெற்ற தீவான தைவானை, சீனா தனது பகுதியை சார்ந்ததாகவே கருதுகிறது. அது குறித்த எந்த ஒரு மாற்றுக் கருத்தைப் பற்றியும் அது மிகவும் விழிப்புடன் பார்க்கிறது.
இந்த சமீபத்திய சம்பவம் வெளிநாட்டு மாணவர்களுக்கான திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது.ஹுனான் தொலைக்காட்சி, சீனாவின் முக்கிய நிலப்பரப்பை சிவப்பு நிறமாகக் கோடிட்டு காட்டியது, ஆனால் தைவானை மட்டும் வெள்ளை நிறமாக விட்டு விட்டது.
பொதுவாக அனைத்து சீன வரைபடங்களும், தைவானை சீனாவின் ஒரு மாகாணமாகவே காட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:
200 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 16 பேர் பலி!
பர்கா அணிய சுவிஸ்சர்லாந்தில் தடை!
3 மணி நேரத்திற்குள் 50 ஏவுகணை தாக்குதல் - உக்ரைனை திணறடித்த ரஸ்யா!
|
|
|


