சீனாவில் வெடிவைத்து தகர்க்கப்பட்ட அணை – 140 பேர் பரிதாபமாக பலி!

Monday, July 20th, 2020

சீனாவில் பெய்து வரும் அடைமழை காரணமாக யாங்சி நதியின் கிளை நதிகளில் ஒன்றான சுகேயின் குறுக்கே உள்ள பெரிய அணை ஒன்று வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.

உன்னான், குவாங்ஜி, திபெத், குய்சோவ், அன்குய், ஜிலின், லியானிங் உள்ளிட்ட மாநிலங்களில் மழை விடாமல் பெய்து வரும் நிலையில், ஏற்பட்ட பெருவெள்ளத்தால் 140 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.

விடாது பெய்யும் கனமழையால் ஆசியாவிலேயே மிக நீளமான யாங்சி நதி உள்ளிட்ட 400 க்கும் மேற்பட்ட நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் யாங்சி நதியில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அதன் கிளை நதிகளில் ஒன்றான சுகே அணை நேற்றையதினம் வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.

இதேவேளை சீனாவில் கடந்த 1998 ஆம் ஆண்டும் இவ்வாறான ஒரு அழிவு ஏற்பட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தார்கள். தொடர்ந்து ஒரு மாதமாக பெய்துவரும் கனமழையால் 3.78 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2.24 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.

Related posts: