சீனாவில் மரண தண்டனை பெற்றவருக்கு 20 ஆண்டுக்கு பின் ரூ.2.75 கோடி நஷ்டஈடு!

சீனாவில் கொலை வழக்கில் மரண தண்டனை பெற்றவர் 20 ஆண்டுகளுக்கு பின் விடுதலை அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சீனாவை சேர்ந்தவர் சென்மேன் (50) கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கொலை வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அவருக்கு கோர்ட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அதை எதிர்த்து அவர் சிறை தண்டனை அனுபவித்தபடியே கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். அப்படியே 20 ஆண்டு காலம் கடந்து விட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அவருக்கு எதிரான போதிய ஆதாரம் இல்லை என கோர்ட்டு தெரிவித்துள்ளது. மேலும், தேவையின்றி 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அனுபவித்த சென்மேனுக்கு அரசு ரூ.2.75 கோடி நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டது.
Related posts:
நற்மதிப்பு தகர்ந்துவிட்டது! - கண்ணீர் விட்ட பியூஷ்!!
அரசியல் சாசன நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பணிந்த தென்னாபிரிக்க அதிபர் ஸூமா!
வடகொரியாவில் தீப்பிடித்து எரிந்த அமெரிக்க தேசிய கொடி!
|
|