சீனாவில் நிதி மோசடி இலட்சக்கணக்கானவர்கள் ஏமாற்றம்!

Wednesday, September 28th, 2016

சீனாவில் தொடர் சங்கிலி கடன் நிறுவனம் ஒன்று திவாலானதால் லட்சக்கணக்கான மக்கள் கோடிக்கணக்கான தமது முதலீட்டை இழந்துள்ளனர்.

பணத்தை இழந்த மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர். போராடியவர்களை படம் பிடிக்கச் சென்ற பிபிசி குழுவினர் காவல்துறையினரால் தடுக்கப்பட்டனர்.’டாடா’ எனும் அந்த நிறுவனம் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக விளம்பரம் செய்தது என முதலீட்டாளர்கள் கூறுகின்றனர்.

மந்தமாக இருந்த வங்கித்துறையை மாற்றியமைக்கும் நோக்கில், இப்படியான பரஸ்பர சகாய நிதி நிறுவனங்களை கடந்த பத்தாண்டுகளாக சீனா ஊக்குவித்தது.ஆனால் இவற்றை கட்டுப்படுத்த முறையான வழிமுறைகள் ஏதுமில்லை.

இப்போது பிரச்சனை வெடித்துள்ள நிலையில், இப்படியான நிறுவனங்களை சீர் செய்யும் நடவடிக்கையில் நிதித்துறை ஒழுங்குமுறை ஆணையம் இறங்கியுள்ளது. சில ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

p0496zy8

Related posts: