சீனாவில் சுரங்கப்பாதையில் வெடிவிபத்து – 7 பேர் உயிரிழப்பு!

சீனாவில் சுரங்கத்துக்குள் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவின் கியாசூ மாகாணத்தில் உள்ள பீஜி மற்றும் சிச்சுவான் மாகாணத்தின் தின்கிங்யாபின் நகரங்களை இணைக்கும் அதிவிரைவு நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
இதன்போது, சற்றும் எதிர்பாராத வகையில் சுரங்கத்துக்குள் வெடிவிபத்து ஏற்பட்டதில், அதனை தொடர்ந்து சுரங்கம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
இந்த விபத்தில், 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
Related posts:
புதிய ஆண்டு பயணத்தை ஆரம்பித்து கடந்த ஆண்டில் தரையிறங்கிய விமானம்!
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்வாங்கிய கடல்!
தீப்பிடித்து எரிந்த உலங்குவானூர்தி - 17 இராணுவ வீரர்கள் பரிதாபமாகப் பலி - கென்யாவில் ஏற்பட்ட துயரம்...
|
|