சீனாவின் Gansu மாகாணத்தில் நிலநடுக்கம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு!
Tuesday, December 19th, 2023
சீனாவின் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 220 பேர் காயமடைந்துள்ளதாக மாகாண நிலநடுக்க நிவாரணத் தலைமையகத்தை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவின் வடமேற்கு Gansu மாகாணத்தில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் அந்தநாட்டு நேரப்படி நேற்று இரவு 11.59 இற்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சில கிராமங்களில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், மீட்பு பணிகளும் விரைவாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சீனாவில் முன்னதாக கடந்த ஒகஸ்ட் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 23 பேறுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 99 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது!
யாழில் வாள் வெட்டுக் குழுவின் தலைவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் - காயமடைந்த தனுரொக் யாழ்ப்பாணம் போத...
போக்குவரத்து மற்றும் சேவைக் கட்டணங்களில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி - எரிசக்தி அமைச்சர் கஞ்சன ...
|
|
|


