சீனாவின் விமர்சனத்துக்கு மத்தியில் தாய்வான் ஜனாதிபதி நியூயோர்க் விஜயம்!

சீனாவின் விமர்சனத்துக்கு மத்தியிலும் தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென் நியூயோர்க்கை சென்றடைந்துள்ளார்.
அவர் தமது விஜயத்தை நிறைவு செய்து மீள திரும்பும் போது வெள்ளை மாளிகை பேச்சாளரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறான சந்திப்பை சீனா கண்டித்துள்ளது. இந்த செயற்பாடு தொடர்ந்தால் அது கடுமையான மோதலுக்கு வழிவகுக்கும் எனவும் சீனா எச்சரித்துள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள அமெரிக்கா, தாய்வான் ஜனாதிபதியின் விஜயத்தை சீனா மிகைப்படுத்தக் கூடாது என அறிவித்துள்ளது. இது பொதுவானதொரு நிகழ்வு எனவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
டிரம்ப் கருத்தால் சலசலப்பு!
ஆயுதங்களை ஒப்படைத்த சிரிய கிளர்ச்சியாளர்கள்!
4 மாடிகளை கொண்ட குடியிருப்பில் தீ விபத்து - 7 சிறுவர்கள் பலி!
|
|