சீனாவிடம் மன்னிப்பு கோரிய பேஸ்புக்!
Monday, January 20th, 2020
தங்கள் இணையதளத்தில் சீன பிரதமர் ஷி ஜின்பிங்கின் பெயர் பர்மிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு ஆபாசமான பொருள் தரும் வகையில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதற்கு பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக நேற்று ஷி ஜின்பிங், மியான்மர் அரசின் தலைவர் ஆங் சான் சூச்சி ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சந்திப்பு பற்றிய பர்மிய அரசின் ஃபேஸ்புக் பதிவில் ஷியின் பெயர் ஆங்கிலத்தில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம், இந்த தவறான மொழிபெயர்ப்புக்கு, “தொழிநுட்ப பிரச்சனையே” காரணம் என்று தெரிவித்துள்ளது.
இது இனியும் நிகழாமல் இருக்க தக்க நடவடிக்கைளை எடுத்து வருகிறோம்” என்று ஃபேஸ்புக்கின் செய்தித்தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன் தெரிவித்துள்ளார்
Related posts:
Leggings அணிந்து விமானத்தில் பயணிக்க தடை!
ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் காவற்துறையினர் சோதனை – அவுஸ்திரேலிய சம்பவம்!
நாங்கள் துருக்கிக்கு அனுமதி வழங்கவில்லை - அமெரிக்கா!
|
|
|


