சீனப் பெருநிலப் பரப்பில் கடந்தது மெரான்டி சூறாவளி!
Thursday, September 15th, 2016
கடந்த 21 வருடங்களில் தைவானை பெரும் பாதிப்புக்குள்ளாக்கிய மெரான்டி சூறாவளி, தற்போது சீனப் பெருநிலப் பரப்பில் கரைகடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மணிக்கு 227 கிலோ மீட்டர் வரையிலான வேகம் கொண்ட இந்த அதி சூறாவளியால், தைவானில் ஒருவர் கொல்லப்பட்டார்.
மேலும், இந்த சூறாவளியால் 5 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சீனாவின் தென் கிழக்கு நகரமான ஷீயாமென் அருகே வியாழக்கிழமை (இன்று) சற்றே வலுவிழந்த நிலையில் இச்சூறாவளி கரையைக் கடந்தது.
இதனால், தெற்கு சீனாவில் பல டஜன் விமான சேவைகள் மற்றும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், பல ஆயிரம் மக்கள் அவர்களின் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

Related posts:
கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியுஸின் மரண விசாரணை ஆரம்பம்!
இரண்டு புகையிரதங்கள் மோதி கோர விபத்து: இருவர் பலி - 70 பேர் படு காயம்!
பிலிப்பைன்ஸ் தீ விபத்து - 4 பேர் உயிரழப்பு!
|
|
|


