சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் இலஞ்சம் கொடுத்த சசிக்கலா!

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சொகுசு வாழ்க்கை நடத்தி வந்தமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே, சிறையில் அங்கு அவருக்கு தனி உணவு வருகிறது, சொகுசு வாழ்க்கை வாழ்கிறார் என்று கூறப்பட்ட போதும் இதனை அதிமுகவினர் மறுத்து வந்தனர்.இந்தநிலையில், சிறைச்சாலையில் அவருக்கு அங்கு தனி சமையலறை, தனி சமையல் பணியாளர்கள் என சொகுசு வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்காக சசிகலா சார்ப்பில், சிறை அதிகாரிகளுக்கு பல கோடி இந்திய ரூபாய் இலஞ்சம் கொடுத்துள்ளதாக, சிறைச்சாலையை சேர்ந்த அதிகாரி ஒருவர் பகிரங்கப்படுத்தி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன..
Related posts:
பதவியிலிருந்து விலகுகிறார் ஜேர்மனிய சான்சலர் ஏஞ்சலா மெர்கல்!
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பாக நால்வர் மீது வழக்கு!
திங்கள்முதல் இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளுக்கு விதித்திருந்த பயணத்தடையை நீக்குகிறது பிலிப்பைன்ஸ் !
|
|