சிறுமிகள் மீது பாலியல் வன்முறை: மரண தண்டனை விதிக்கும் அவசர சட்டத்திற்கு அனுமதி !

இந்திய மத்திய அமைச்சரவை சிறுமிகள் மீது பாலியல் வன்முறைகள் தொடுக்கின்றவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் அவசர சட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது.
அண்மையில் ஆசிபா என்ற சிறுமி காஷ்மீரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதிலும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவையில் இந்த மரண தண்டனை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியதன் பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
நோயாளர், முதியோர் கொடுப்பனவுகளை பிரதேச செயலகத்தில் பெறுவோர் அவதி!
கோவிட்டை கட்டுப்படுத்த ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே - தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் தவறாது பெற வ...
அமைச்சரவையில் மௌனமாகயிருந்தவர்கள் தற்போது அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர்- அமைச்சர் நாமல் சுட்டிக்காட்...
|
|