சிரிய தாக்குதலில் 20 பேர் பலி!
Monday, August 29th, 2016
சிரியாவில், ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது துருக்கி விமானப்படை நடத்திய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டதாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
சிரியாவின் ஜராபுலுஸ் ஜெப் எல் குசா என்ற கிராமத்தில் துருக்கி விமானப்படை நடத்திய வான்வெளி தாக்குதலில் 20 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 50 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியாவில், பயங்கரவாதிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் ஒரு இராணுவ வீரர் பலியாகியுள்ளதாக துருக்கி அரசு கூறியுள்ளது.
அங்குள்ள டாங்கிகளை குறிவைத்து, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகவும் துருக்கி தாக்குதல் நடத்திய பிறகு, அந்நாட்டு இராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளது இதுவே முதல்முறையாகும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ஜப்பானில் விஷ ஊசியால் 48 முதியவர்கள் கொலை !
ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகளுக்காக பழைய அலைபேசிகள் சேகரிப்பு!
அறிவியலே இந்தியாவை சுயசார்பு நாடாக்கும் – பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவிப்பு!
|
|
|


