சிரியா போர் நிறுத்தம் முறிந்ததா?

Tuesday, September 20th, 2016

 

சிரியாவில் போர் நிறுத்தம் முறிந்துவிட்டதாக இராணுவம் அறிவித்துள்ள  நிலையில், அங்கு போர் நிறுத்தம் குறித்த சந்தேகங்கள் அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏழு நாட்களுக்கு முன் தொடங்கிய போர் நிறுத்தத்தை தொடர்ந்து மீறியதாக போராளிகள் மீது சிரியா இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது; அதே குற்றச்சாட்டை போராளிகளின் அமைப்பு சிரியா அரசின் மீது சுமத்தியுள்ளது.

முன்னதாக, தீவிரவாதிகளால் தாக்கப்படும் பட்சத்தில் சிரியா அரசுப் படைகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிப்பது முட்டாள்தனமானது என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிரியா போர் நிறுத்தம் பலவீனமாக இருப்பதாகவும் ஆனால் அது இன்னும் அமலில் இருக்கிறது எனவும் அமெரிக்க வெளியுறவு செயலர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார்.

_91305317_160918223542_syria_640x360_afp_nocredit

Related posts: