சிரியாவில் குண்டுவெடிப்பு: 30 இற்கும் மேற்பட்டோர் பலி!
Tuesday, September 6th, 2016
சிரியாவில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பிராந்தியங்களில் நடைபெற்றுள்ள தொடர் தாக்குதல்களில் 30 மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவின் முக்கிய விமானத்தளம் அமைந்திருக்கும் கடற்கரை நகரமான தார்ட்டூஸில் பெரிய குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.அங்கு மட்டும் 30 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில் பெரும்பாலனாவர்கள் முன்னர் தற்கொலை குண்டுதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்த மீட்புதவி பணியாளர்கள்.
ஹோம்ஸில் இருந்த அரச படையின் சோதனைச் சாவடி ஒன்றில் இன்னொரு கார் குண்டு வெடித்ததில் இரண்டு படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.சிரியா அரசாலும், குர்து படையினராலும் இரண்டு பிரிவாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வட கிழக்கில் இருக்கின்ற ஹசாக்கா நகரில், ஐந்து பேர் கொல்லப்பட்டுள்னர்.

Related posts:
இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றார் அமெரிக்க பாடகர் பாப் டிலன்!
ஈராக்கில் 39 இந்தியர்களைக் காணவில்லை...கடத்தப்பட்டிருக்கலாம் என அச்சம்!
தண்ணீர் உள்ள புதிய கிரகம் கண்டுபிடிப்பு!
|
|
|


