சிரிய அரச படையினர் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்!

Wednesday, September 14th, 2016

சிரியாவில் இடம்பெறும் மோதலில் மோட்டார் குண்டோன்று இஸ்ரேல் கட்டுப்பாட்டு கோலன் குன்றில் விழுந்ததை அடுத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று சிரிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளன.

கடந்த திங்கட்கிழமை மாலை இஸ்ரேலிய கட்டுப்பாட்டு பகுதியில் விழுந்த மோட்டார் குண்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. “மத்திய சிரிய கோலன் குன்று பகுதியில் இருக்கும் சிரிய அரச படையின் பீரங்கி தளங்களை விமானங்கள் இலக்கு வைத்தது” என்று இஸ்ரேல் இராணுவத்தின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

சிரியாவில் இருந்து எல்லை தாண்டி இவ்வாறான தாக்குதல்களுக்கு இஸ்ரேல் கடந்த காலங்களிலும் பதில் தாக்குதல்களை நடத்தியுள்ளது. கடந்த செப்டெம்பர் 4 முதல் நான்காவது தடவையாகவே சிரியா மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்டை நாடான சிரியாவில் ஆறு ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு யுத்தத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது குறித்து இஸ்ரேல் அவதானத்துடன் உள்ளது. 1967 மத்திய கிழக்கு யுத்தத்தின்போதே சிரியாவின் கோலன் குன்றை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.

air-strike

Related posts: