சியரா லியோனில் எரிபொருள் தங்கி வெடித்து சிதறியதால் 98 பேர் உயிரிழப்பு!
Sunday, November 7th, 2021
மேற்கு ஆரிக்க நாடான சியரா லியோனின் தலைநகர் ஃப்ரீடவுனில் எரிபொருள் தங்கி ஒன்று லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
எரிபொருள் கசிவைக் கண்டு, வாகன சாரதிகள் எச்சரிக்கை விடுத்திருந்தபோதும் மக்கள் எரிபொருளை சேகரிக்க முயன்றபோது வெடிப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் குறைந்தது 98 பேர் உயிரிழந்தனர் என்றும் சுமார் 92 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
குறித்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பலர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு இந்த சம்பவத்தை தேசியப் பேரிடர் என அறிவித்துள்ள துணை ஜனாதிபதி காயமடைந்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என கூறியுள்ளார்.
000
Related posts:
அமெரிக்காவில் இலங்கையர் உள்ளிட்ட 45 பேர் கைது!
மேத்யூ சூறாவளியின் தாக்கத்தை ஹேய்ட்டி தாக்குப்பிடிக்குமா?
பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் - பங்களாதேஷ் அரசுக்கு எதிராக வலுப்பெறும் போராட்டம்!
|
|
|


