சின்னத்தை ஒதுக்கித்தர தீபா கோரிக்கை!

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவரது வேட்புமனு நேற்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுபவர்களுக்கு வரும் 27-ஆம் தேதி தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கவுள்ளது. அதில் தனக்கு பேனா, திராட்சை கொத்து, படகு ஆகிய சின்னங்களில் ஒன்றை ஒதுக்கும்படி தீபா கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை நிர்வாகி ஒருவர் கூறுகையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணியாற்ற 50 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழுவை தீபா நியமித்துள்ளார். சின்னம் கிடைத்தவுடன் தீபா, ஆர்.கே. நகரில் பிரச்சாரத்தை தொடங்குவார் என்று கூறினார்.
Related posts:
ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளார் ஹிலரி!
இல்லாத படையினருக்கு ஊதியமா? பென்டகனை கோரும் அமெரிக்க கண்காணிப்பு அமைப்பு!
கோழி இறைச்சியில் கொரோனா - சீனா வெளியிட்டுள்ள அறிவிப்பு!
|
|