சினாபொங் எரிமலை கரும்புகையுடன் வெடித்தது!
Friday, December 29th, 2017
பல நாட்களாக இந்தோனேசியாவின் வட சுமாத்திரா தீவில் குமுறி வந்த எரிமலையான சினாபொங் வெடித்தது. இதனால் அப்பகுதிவானத்தில் 4.6 கிலோமீட்டர் உயரத்துக்கு அது கரும்புகையைப் பரப்பியதுடன் சுற்றுச்சூழல் முழுவதும் சாம்பலைக் கக்கியதாக அப்பகுதிமக்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இதுவரை யாருக்கும் காயமேற்படவில்லை என அந்நாட்டு தேசியப் பேரிடர் நிர்வாக அமைப்பு அறிவித்துள்ளது. அத்துடன்எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதியில் குடியிருந்த பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குமாற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த 2015 ஆம் ஆண்டு சினாபொங் எரிமலை வெடித்ததில் 6 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வி - டெட் குரூஸ் வெற்றி!
ஜெருசலம் ஆர்ப்பாட்டத்தில் பலஸ்தீனர் சுட்டுக் படுகொலை!
சீரற்ற காலநிலை - ஜெர்மனியில் அவசரகால நிலை அறிவிப்பு - ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!
|
|
|


