சவுதி விமானப்படைகள் தாக்குதலில் ஏமனில் 39 பேர் உயிரிழப்பு!

Thursday, December 14th, 2017

ஏமனில் தலைநகரமான சனா நகரில் உள்ள இராணுவ பொலிஸ் முகாமின் மீது சவுதி அரேபியா தலைமையிலான விமானப்படைகள் நேற்று நடத்திய தாக்குதலில் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏமன் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுப் படைகளுடன் புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமியப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. இந்த ஆதரவுடன் நாட்டின் தலைநகரான சனா பகுதியை கைப்பற்றியுள்ள புரட்சிப் படையினர் அந்நகரை தங்களது ஆளுமைக்கு உட்படுத்தி வைத்துள்ளனர்.

கடந்த மூன்றாண்டுகளாக அரசுப் படைகளுடன் ஹவுத்தி புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். அரசுப் படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமியப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன.

இந்நிலையில், சனா நகரில் ஹவுத்தி போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இராணுவ பொலிஸ் முகாமின் மீது சவுதி அரேபியா தலைமையிலான விமானப்படைகள் நேற்று நடத்திய தாக்குதலில் 39 பேர் உயிரிழந்தனர். சுமார் 90 பேர் படுகாயம் அடைந்தனர் இவர்களில் பலர் சிறை கைதிகள் என உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன

Related posts: