சவுதி மீது வழக்கு தொடுக்க பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமெரிக்கா நாடாளுமன்றம் அனுமதி!

Thursday, September 29th, 2016

அமெரிக்காவில் அதிபர் ஒபாமா, நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டமொன்றை தனது வெட்டு அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்ததை மீறி, 9/11 தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சவுதி அரசாங்கம் மீது வழக்கு தொடுக்க அனுமதிக்கும் நாடாளுமன்றத்தின் முடிவை ஆபத்தான முன் உதாரணம் என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சட்டம், தண்டனைக்கப்பாற்பட்ட இறையாண்மை என்ற கோட்பாட்டை நீக்கும் விதமாக உள்ளது என்றும், வெளிநாடுகளில் வாழும் அமெரிக்க படையினர் மற்றும் அதிகாரிகள் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் சாத்தியக்கூறுகளை இது திறந்துவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த ஜனநாயக கட்சி உறுப்பினர் சக் ஷூமெர், இந்த சட்டம் இராஜதந்திர அசெளகரியங்களை ஏற்படுத்தி இருந்தாலும், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நீதியை பின் தொடர அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் ஒபாமாவின் வெட்டு அதிகாரத்தை மீறி அமெரிக்க நாடாளுமன்றம் வாக்களித்தது இதுவே முதல் முறை.

_91417556_eab8173e-e0ad-4fc6-8e2b-7f44d7a07e73

Related posts: