சவுதி இளவரசருக்கு மரண தண்டனை!

Wednesday, December 7th, 2016

தலைநகர் ரியாத்தில் 3 ஆண்டுகளுக்கு முன் வாய்த்தகராறில் ஒருவரை சுட்டுக்கொன்ற வழக்கில் சவுதி அரேபிய இளவரசர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

துர்க்கி பின் சௌத் அல் கபீர் என்ற குறித்த சவுதி இளவரசருக்கு மரண தண்டனை எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பது தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை.

எவ்வாறாயினும், சவுதியில் மரண தண்டனை விதிக்கப்படுவோருக்கு பொதுவாக சிரச்சேதம் செய்யப்படுவது வழக்கம். இளவரசர் கபீர் இந்த ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டோரில் 134 ஆவது நபர் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இளவரசர் கபீர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் பாதுகாப்பையும் நீதியையும் நிலைநாட்ட அரசு ஆர்வமுடன் இருப்பதை மக்களுக்கு இந்த மரண தண்டனை நிறைவேற்றம் உறுதிப்படுத்தும் என்றும் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

000_nic446905-wb

Related posts: