சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை!

Sunday, June 19th, 2016

இவ்வருடம் இடம்பெறவுள்ள ரியோ ஒலிம்பிக் போட்டி உட்பட அனைத்த விதமான சர்வதேச தடகள போட்டிகளில் பங்குபற்ற ரஷ்யாவிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தடகள சம்மேளனம் ரஷ்யாவிற்கு ஏற்கனவே விதித்திருந்த தடையை நீடித்ததமையினால் குறித்த காலப்பகுதியில் நடைபெறும் அனைத்து விதமான தடகள போட்டிகளுக்கும் ரஷ்யா பங்கபற்றுவதற்கான உரிமை இல்லாமலாக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அரச ஆதரவுடனான வீரர்கள் தடைவிதிக்கப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு அமைய சர்வதேச தடகள சம்மேளனம்கடந்த வருடம் ரஷ்யாவுக்கு எதிராக தடைவிதித்தது. எனினும் இந்த தடைக்கு பின்னர் சர்வதேச  தடகள சம்மேளனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய செயற்பட்டு வரும் ரஷ்ய தடகள வீரர்களுக்கு எதிராக மீண்டும் தடைவிதித்துள்ளமை மிகவும் நியாயமற்றது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் குழுவின் நிர்வாக கூட்டத்தில், மேலும் பல தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படும்  என தெரிவித்தார்.

Related posts: