சர்வதேசம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடினின் வெற்றி தின உரை!
Monday, May 9th, 2022
உக்ரைன் மீது தற்போது மேற்கொள்ளப்படும் சிறப்பு இராணுவ நடவடிக்கைக்கு மாறாக, உக்ரைன் மீது முழுமையான போரை ரஷ்ய ஜனாதிபதி புடின் இன்று அறிவிக்கக்கூடும் என்று ஊகங்கள் எழுந்துள்ளன.
எனினும் அவ்வாறான திட்டங்கள் இல்லை என்று மொஸ்கோ மறுத்துள்ளது.
1945 இரண்டாம் உலகப்போரில் நாஸி ஜெர்மனிக்கு எதிரான வெற்றியைக் குறிக்கும் வகையில், ரஷ்யா, தனது வருடாந்த இராணுவ அணிவகுப்பை இன்று மே 9ஆம் திகதியன்று மொஸ்கோவின் சிவப்பு சதுக்கத்திலும் ரஷ்யா முழுவதும் உள்ள நகரங்களிலும் நடத்தி வருகிறது.
ரஷ்யர்கள் பெரும் தேசபக்திப் போர் என்று அழைக்கும் இந்த போரில், எந்த நாட்டிலும் இல்லாத மிகப் பெரிய இழப்பாக சுமார் 27 மில்லியன் சோவியத் குடிமக்கள் இறந்தனர்.
இந்தநிலையில் இன்றைய வெற்றித்தினத்தில் உக்ரைன் மீதான முழுமையான போரை புட்டின் பிரகடனப்படுத்தலாம் என்று ஊகங்கள் வெளியிடப்பட்டபோதும், ரஷ்ய அரசாங்கம் அதனை மறுத்துள்ளது.
Related posts:
|
|
|


