சமூகவலைத் தளங்களை முடக்கியது வட கொரியா!
Saturday, April 2nd, 2016
அரச விவகாரங்கள் வெளியே கசிவதால், பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் தளங்களை முடக்குவதாக வட கொரியா உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுத்துள்ளது.
அந்நாட்டின் தொலைத் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் இணையத்தளங்களுடன், அரசுக்கு எதிரான கொள்கைகளை வெளியிடும் இணையத்தளங்கள், பாலியல் சம்பந்தமான இணையத்தளங்கள் அனைத்தும் இந்த வாரத்திற்குள் முடக்கப்படும் என்றும் பியாங்யாங்கில் வெள்ளிக்கிழமை முதல் இந்த இணையத்தளங்களைப் பார்வையிட இயலாது என்றும் கூறப்பட்டுள்ளது.
வட கொரியாவில் மிகக் குறைந்த நபர்களே இணையத்தளங்களைப் பயன்படுத்து கின்றனர். அவர்களும் இனி அரசு அனுமதிக்கும் இணையத்தளங்களை மட்டுமே பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிலியில் சாலை விபத்து - 09 பேர் பலி!
கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 47 இலட்சத்தையும் தாண்டியது !
இலங்கையுடனான சீனாவின் நெருங்கிய ஒத்துழைப்பைக் கண்டு துவண்டு போக வேண்டாம் - அமெரிக்காவுக்கு சீனா அறிவ...
|
|
|


