சந்திரயான் – 3 நவம்பரில் விண்ணுக்கு – இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை!

Friday, November 15th, 2019

சந்திரயான் 3 அடுத்த வருடம் நவம்பர் மாதம் விண்ணில் பறக்கும் எனவும், அதில் அனுப்பப்படும் லேண்டர் சாதனையை நிகழ்த்தும் எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நிலவின் தென் துருவத்தை ஆராயும் வகையில், சந்திரயான் 2 விண்கலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவால் அனுப்பப்பட்டது.

சந்திரயான் 2ல் அனுப்பப்பட்ட ஆர்பிட்டரும் ரோவரும் இப்போதுவரை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. எனினும், சந்திரயான் 2 விண்கலத்தில் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் தனது தொடர்பைத் துண்டித்துக் கொண்டது.

இந்நிலையில், இஸ்ரோ இப்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் நவம்பர் மாதம் 2020ல் சந்திரயான் 3 விண்வெளிக்கு அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: