சச்சின் தெண்டுல்கரை அகற்ற மாநகராட்சி உத்தரவு!

Thursday, June 16th, 2016

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஆர்.பி.ஜி. கலை நிறுவனம் சார்பில் மும்பை மெரின் டிரைவில் சச்சின் தெண்டுல்கர் உருவம் பொறித்த சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கல்வெட்டு அமைக்கப்பட்டடிருந்தது.

இதற்கு உள்ளூர் பொதுமக்களும், சமூகநல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, சச்சின் தெண்டுல்கர் சிற்பத்தை உடனடியாக அங்கிருந்து அகற்றுமாறு ஆர்.பி.ஜி. கலை நிறுவனத்துக்கு மாநகராட்சி உத்தரவிட்டது. இதன்பேரில், சிற்பத்தை அகற்றுவதற்கான பணியில் ஈடுபட்டு வருவதாக அந்நிறுவன துணை தலைவர் சுமீத் சட்டர்ஜி தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

Related posts: