கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைகள் மந்த நிலையில் இடம்பெறுகின்றன-உலக சுகாதார ஸ்தாபனம்!

ஐரோப்பாவில் கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை, ஏற்றுக்கொள்ள முடியாத அளவு மந்த நிலையில் இடம்பெறுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் விமர்சித்துள்ளது.
அண்மைய பல மாதங்களாக இருந்ததை விடவும், ஐரோப்பிய பிராந்தியத்தில், தற்போது நிலைமை கவலையளிப்பதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவின் பல பாகங்களில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
பிரித்தானியா, 52 சதவீத தடுப்பூசி செலுத்தலை முன்னெடுத்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியம், அதன் மக்கள் தொகையில், 16 சதவீதத்தினருக்கு மாத்திரமே தடுப்பூசியை செலுத்தியுள்ளதாக விமர்சிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நடைமுறை ஆரம்பம் - தெரீசா மே!
பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள அமெரிக்கா உதவும் - தூதுவர் ஜூலி சங் தெரிவிப்பு!
|
|