கொரோனா வைரஸ் தொற்று: அமெரிக்காவில் 1100 பேர் பலி – 82 ஆயிரம் பேர் பாதிப்பு!
Friday, March 27th, 2020
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் அமெரிக்கா, சீனாவை முந்தியுள்ளது.
சீனாவில் இதுவரை காலமும் 81 ஆயிரத்து 782 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.
எனினும் அமெரிக்காவில் இதுவரை 82 ஆயிரத்து 404 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். அங்கு 1100 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில் நாடு மீண்டும் அவசரமாக இயல்புக்கு திரும்புதற்கான பணிகள் குறித்து ஆராய்வதாக ஜனாதிபதி டொனால்ட் டம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சீன ஜனாதிபதி , அமெரிக்க ஜனாதிபதியுடன் கொரோனா வைரஸ் தொடர்பில் நேற்று தொலைபேசியில் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி; அரபிக் கடலில் மேலடுக்கு சுழற்சி!
ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் - 15 பேர் பலி!
கொவிட்-19 வைரஸ் தாக்கம்: ஜப்பானில் 70 பேருக்கு உறுதி!
|
|
|


