கொரோனா வைரஸ்: இத்தாலியில் 100 வைத்தியர்கள் பலி!
Friday, April 10th, 2020
உலக அளவில் கொரோனா வைரஸூக்கு அதிகம்பேர் பலியான நாடாக இத்தாலி திகழ்கிறது. இந்நிலையில், இன்னொரு அதிர்ச்சிகரமான தகவலாக, இத்தாலியில் கொரோனாவுக்கு இதுவரை 100 வைத்தியர்கள் பலியானதாக தெரிய வந்துள்ளது. இவர்களில், ஒரு மாதத்துக்கு முன்பு மீண்டும் வேலையில் சேர்ந்த ஓய்வுபெற்ற வைத்தியர்களும் அடங்குவர் என அந்நாட்டு சுகாதார சங்கம் தெரிவித்துள்ளது. இதுபோல், 30 தாதிகள் மற்றும் மருத்துவ உதவியாளர்களும் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதம் பேர், மருத்துவ துறையில் பணியாற்றுபவர்கள் என்ற தகவலை மற்றொரு அமைப்பு வெளியிட்டுள்ளது.
Related posts:
சமூக சகவாழ்வின் மகிமையை உலக சமூகத்திற்கு எடுத்துரைக்கும் ஒரு முக்கிய சமய விழாவாக ஹஜ் பெருநாள் அமைகின...
சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்களுக்கு முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை – கல்வி அமைச்சு...
பண்டிகைக் காலத்தில் பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் விபத்துகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு வலியு...
|
|
|


