கொரோனா வைரஸ்: இத்தாலியில் ஒரே நாளில் 800 பேர் பலி!
Sunday, March 22nd, 2020
இத்தாலியில் நேற்று ஒரு நாளில் மாத்திரம் கொரோனா வைஸ் தொற்றினால் 800 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி அங்கு கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4825ஆக உயர்ந்துள்ளது. இதில் லொம்பாடி என்ற இத்தில் மாத்திரம் 3095 பேர் வரை மரணமாகியுள்ளனர்.
இதனையடுத்து லொம்பாடியில் கடுமையான செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு அனைத்து வெளியக செயற்பாடுகளுக்கும் தடை விதிக்கப்ட்டுள்ளது.
முழுமையாக இத்தாலிய மக்கள் அனைவருமே வீடுகளில் இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர். ஐரோப்பாவில் இத்தாலிக்கு அடுத்ததாக ஸ்பெயினில் கொரோனா வைரஸினால் 1326 பேர் மரணமாகியுள்ளனர்
46 மில்லியன் மக்கள் முழுமையான அடைப்புக்கு உள்ளாகியுள்ளனர். பிரான்ஸில் இதுவரை கொரோனா வைரஸினால் 562பேர் மரணமாகினர்.
Related posts:
உணவு அளிக்கப்படும்போது சிறு பாத்திரத்தில் தண்ணீர் கொடுப்பார்கள் !
நியூசிலாந்து பள்ளிவாசல் தாக்குதல் : துப்பாக்கிதாரிக்கு 86 கொலைக் குற்றச்சாட்டுகள்!
பலாலி சர்வதேச விமான நிலையத்தில் வசதிகளை விரிவுபடுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற ...
|
|
|


