கொரோனா தொற்று: சர்வதேச ரீதியில் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 70 ஆயிரத்தை கடந்தது!

Tuesday, April 21st, 2020

கொரோனா தொற்று காரணமாக இதுவரை சர்வதேச ரீதியில் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 70 ஆயிரத்தை கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனடிப்படையில் சர்வதேச ரீதியில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 370 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் 24 லட்சத்து 79 ஆயிரத்து 691 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

எவ்வாறாயினும் 6 லட்சத்து 46 ஆயிரத்து 248 பேர் குணமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை கொரோனா தொற்று காரணமாக அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 939 பேர் பலியாகியுள்ளனர்.

அத்துடன் அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான 28 ஆயிரத்து 123 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் அமெரிக்காவில் இதுவரையில் 42 ஆயிரத்து 514 பேர் பலியாகியுள்ளதோடு 7 லட்சத்து 92 ஆயிரத்து 759 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் பிரான்சில் கடந்த 24 மணித்தியாலங்களில் 547 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் பிரான்சில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 489 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் பிரான்சில் இதுவரையில் 20 ஆயிரத்து 265 பேர் பலியாகியுள்ளதோடு  ஒரு இலட்சத்து 55 ஆயிரத்து 383 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சர்வதேச செய்திகள் கூறுகின்றன.

Related posts: