கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 47 இலட்சத்தையும் தாண்டியது !

சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 47 இலட்சத்து 16 ஆயிரத்து 748 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 12 ஆயிரத்து 368 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 இலட்சத்து 9 ஆயிரத்து 824 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொவிட் – 19 தொற்று காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 591 ஆக அதிகரித்துள்ளது. அங்கு 15 இலட்சத்து 07 ஆயிரத்து 675 பேருக்கு வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.
Related posts:
இலங்கை அகதிகள் சென்னையில் பேரணி!
முக்கிய நகரை மீட்க தீவிர தாக்குதலில் ஈராக் ராணுவம்!
சுவீடனில் வருகிறது அதிரடி மாற்றம்!
|
|