கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்தை தாண்டியுள்ளது – முடக்கல் நிலை தளர்த்தப்படுவதால் மீண்டும் பரவல் தோற்றும் என அச்சம்!

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்தை தாண்டியுள்ளது.
அத்துடன் மரண எண்ணிக்கையும் 2 இலட்சத்துக்கு 77 ஆயிரத்தை கடந்துள்ளது. தொடர்ந்தும் அமெரிக்காவிலேயே அதிக உயிரிழப்புக்கள் பதிவாகி வருகின்றன.
ஸ்பெயினில் கொரோனா தொற்று மரண எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளது. எனினும் முடக்கல் நிலை தளர்த்தப்பட்டமையால் அங்கு மீண்டும் கொரோனா பெரும் பரவல் அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா தொடர்பாக அவசர விழிப்புணர்வு குறுஞ்செயற்திட்டம் ஒன்றை இன்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவிக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை கொரோனாவினால் 30ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
இதேவேளை கொரோனா தொடர்பில் தமது சுகாதாரத்துறையில் குறைபாடு இருந்தமையை சீனா முதல் தடவையாக ஏற்றுக்கொண்டுள்ளது. நாட்டின் தேசிய சுகாதார ஆணைக்குழு பணிப்பாளர் லின் பின் இந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டுள்ளார். தமது நாடு கொரோனா தொடர்பில் கட்டுப்பாட்டு திட்டத்தில் முன்னேற்றம் காட்டவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா விடயத்தில் தமக்கு பின்னர் பதவிக்கு வந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் செயற்பாட்டை முன்னாள் ஜனரிபதி பெராக் ஒபாமா கண்டித்துள்ளார்.
இதனால் இன்று அமெரிக்காவில் குழப்பமான பேரழிவு என்று அவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட உணவு பங்கீட்டின்போது ஏற்பட்ட மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதில் இரண்டு காவல்துறையினரும் நான் பொதுமக்களும் அடங்குகின்றனர்.
ரஷ்யாவில் நேற்ற இடம்பெற்ற இரண்டாம் உலகப்போர் வெற்றி நிகழ்வில் எவ்வித இராணுவத்தளபாட அணிவகுப்பும் இடம்பெறவில்லை.
குவைத்திலும் சூடானிலும் இன்றுமுதல் கொரோனா கட்டுப்பாட்டுக்காக முழுமை தடை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனாவினால் குவைத்தில் 40பேரும் சூடானில் 60 பேரும் இதுவரை மரணமாகியுள்ளனர்.
Related posts:
|
|