கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் – இந்திய பிரதமர் நரேந்திர மோடி!
Friday, April 16th, 2021
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் விஸ்பரூபம் எடுத்துள்ள நிலையில் தொற்றை கட்டுப்படுத்துவதற்கா தீவிர நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தார்.
கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என பிரதமர் நரேந்திர மோடி குறித்த கலந்துரையாடலில் தெரிவித்திருந்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், கொரோனாவுக்கு எதிரான போரில் ஆளுநர்கள் தூண்களாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என குறிப்பிட்ட அவர், கொரோனாவுக்கு எதிரான போரில் அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு அவசியம் என்பதையும் வலியுறுத்தியதோடு மக்களும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஆப்கன் சிறப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி!
பாபர் மசூதி விவகாரம்: அத்வானி உள்ளிட்டோருக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு
சீனாவில் அலுவலகத்தை தற்காலிகமாக மூடவுள்ள முக்கிய நிறுவனம்!
|
|
|


